Archive for September, 2012
கடந்த 12 ஆண்டு இடைவெளியின் பின் நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்காரத் திருவிழா
ஆரம்பம் 24.09.2012 திங்கட்கிழமை
நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலைகள் காரணமாக நாகர்கோவில் வாழ்மக்கள் கடந்த 2000ம் ஆண்டு இடம்பெயர வேண்டிய ஒரு துர்ப்பாய்கிய நிகழ்வ இடம்பெற்றது.இதன் பின் 2011ம் ஆண்டு யூலை மாதம் 21ம் திகதி மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப் பட்டனர். கடந்த 12 வருடகால இடைவெளியின் பின்மிகவும் விமரிசையாக நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவ திருவிழா எதிர்வரும் 24.09.2012 திங்கட்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது என்பதனை உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம். 7 வது நாள் கப்பல் திருவிழாவும், 8 வது நாள் வேட்டைத் திருவிழாவும், 9வது நாள் சப்பறத் திருவிழாவும் 10வது நாள் சமுத்திர தீர்த்தத் திருவிழாவும் இடம்பெற உள்ளன காணுதற்கரிய இப்பெருவிழாவினை உலகெங்கும் பரந்து வாழும் பூர்வீக நாகதம்பிரான் அடியார்கள் யாவரும் தரிசித்து பேரின்பமும் பெருவாழ்வும் பெற்று வாழ நாகதம்பிரான் பாதார விந்தங்களைப் பணிந்து வேண்டி நிற்கின்றோம். Read the rest of this entry »