நாகர்கோவில்நாகம்.கொம் இணையத்தளம் 2011 ஆம் ஆண்டு ஆனி மாதம் 22 ஆம் திகதி முதல் எமது கிராமம் தொடர்பான உண்மைத் தகவல்களை வெளியிடும் நோக்கினைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட யுத்காலச் சூழ்நிலைகளால் எமது கிராமம் முற்று முழுதாக அழிக்கப்பட்டுள்ளது. எமது கிராமத்தவர்கள் 2000 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 3வது வாரமளவில் தமது உடமைகள் அனைத்தையும் விட்டுவிட்டு உடுத்த உடையுடன் முற்றுமுழுதாக இடம்பெயர வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. இதனால் எமது மக்கள் அனைவரும்
நாலாபக்கமும் சிதறுண்டு அயல் கிராமங்களிலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இன்று வரை எம்மவர்கள் மீளக்குடியமர்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் நாங்கள் பிறந்து,வளர்ந்து, தவழ்ந்து, நடந்து உலாவிய கிராமத்தின் பெயரும் அதன் நினைவுகளும் எம்மவர் மனங்களிலிருந்து மறைந்தோ அன்றி விடுபட்டோ போய்விடக்கூடாது. என்ற நோக்குடன் இவ் இணையத்தளம் எமது கிராமத்து மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.இவ் இணையத்தளத்தில் பதிவுகள், எம்மைப்பற்றி, கிராமத்தின் வரலாறு, கிராமத்தின் முக்கிய ஆலயங்கள், பாடசாலைகள், ஆக்கங்கள், கிராமத்தின் பெரியார்கள், அறிவித்தல்கள், மரண அறிவித்தல்கள், தற்காலத்தில் எம்மவர் நிகழ்வுகள், தொடர்புகள் போன்ற விபரங்களுடன் மேலும் பல தகவல்களும் ஒருங்கே இணைக்கப்பட்டு வெளியிடப்படும்.தொடர்ந்தும் எம் கிராமம் தொடர்பான தகவல்கள் கிடைக்கும் போது இவ் இணையத்தளத்தினூடாக வெளிக்கொண்டு வருவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றோம். எமது இணையத்தளத்தில் வெளியிடப்படும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானதாக காணப்படின் அவை பற்றி உரிய ஆதாரங்களுடன் தெரியப்படுத்தினால் இவ் இணையத்தளத்தினூடாக வெளிக்கொண்டு வரப்படும்.