20.1.2011 திகதி தைப்பூசத்தினத்தில் ஆலயக்கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு துரித கதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இக்கட்டுமானப்பணிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வதியும் நாகதம்பிரான் அடியார்களிடமிருந்து போதிய ஆதரவு கிடைத்து வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

வங்கிக் கணக்கு விபரம்

1)Nagarkovil Poorvika Nagathampiran Aalaya Paripalana Sabai,
Bank Of Ceylon,
Nelliady,Srilanka.
Current Account No: 71373532

2)Nagarkovil Poorvika Nagathampiran Aalaya Paripalana Sabai,
Bank Of Ceylon,
Nelliady,Srilanka.
Saving Account No: 71373459

3)Nagarkovil Poorvika Nagathampiran Aalaya Paripalana Sabai,
Commercial Bank,
Nelliady,Srilanka.
Saving Account No: 8108039475

வங்கியூடாக நன்கொடைகளை வழங்குபவர்கள் அதுகுறித்து விபரங்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கோ அன்றி தொலைபேசியூடாகவோ தெரியப்படுத்தவும். நன்கொடை வழங்கியவர்களுக்கு காலக்கிரமத்தில் பற்றுச்சீட்டுக்கள் அனுப்பி வைக்கப்படும்.

நாகர் கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய கட்டுமானப் பணிகள்

நாகர கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய கட்டுமானப் பணிகள், சிற்ப வேலைகள் யாவும் தென்னிந்தியா, தமிழ்நாடு, நாகை மாவட்டத்தினை நிரந்தர வதிவிடமாகவும் யாழ்ப்பாணம் நல்லூர் அம்மன் வீதியைத் தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிற்பாசாரி திரு. K.புருஷோத்தமன் (ஸ்தபதி) அவர்களிடம் நாகர் கோவில் நாகதம்பிரான் ஆலய பரிபாலன சபையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிற்பாசாரி திரு. K.புருஷோத்தமன்  யாழ். மாவட்டத்தின் 400 மேற்பட்ட கோவில்களின் திருப்பணி வேலைகளை மிக அழகுறவும் கலை அம்சங்களுடனும் விதிமுறைகளுக்கு அமையவும் செய்து முடித்துள்ளமையை யாவரும் அறிவர்.

இவற்றிற் சில நல்லூர் வீரமாகாளி அம்மன், நல்லூர் சிவன் கோவில், ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோவில், தெல்லிப்பழை துர்க்காதேவி அம்மன் ஆலயம், உரும்பிராய் கற்பக விநாயகர் ஆலய திருப்பணி வேலைகள் குறிப்பிடத்தக்க ஒரு சிலவாகும். இவற்றின் கலை அம்சங்களையும், சிற்ப வேலைப்பாடுகளையும் கண்ணுற்ற ஆலய பரிபாலன சபையினர் நாகர் கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய திருப்பணி வேலைகளையும் திரு. K.புருஷோத்தமன் அவர்களிடம் ஒப்படைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இத்திருப்பணி வேலைகள் 20.01.2011 ஞாயிறு தைப்பூச தினத்தன்று ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. மேற்படி திருப்பணி வேலைகள் தைப்பூச தினத்தன்று எடுக்கப்பட்ட ஒரு சில படங்களை இங்கே பார்க்கவும்.

Leave a Reply

You must be logged in to post a comment.