20.1.2011 திகதி தைப்பூசத்தினத்தில் ஆலயக்கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு துரித கதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இக்கட்டுமானப்பணிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வதியும் நாகதம்பிரான் அடியார்களிடமிருந்து போதிய ஆதரவு கிடைத்து வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பரந்து வாழும் எம்பெருமானின் பக்த அடியார்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்
2000 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இடப்பெயர்வினாலும், அதன்பின் ஏற்பட்ட அனர்த்தங்களினாலும் நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயம் முற்றாக சேதமடைந்துள்ளது. இவ் ஆலயத்தின் புனருத்தாபண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு துரிதகதியில் நடைபெற்று வருகின்றது. இவ்வேலைகள் அனைத்தையும் 31.05.2011 இற்கு முன் முடிவுறுத்தி கும்பாபிஷேகம் செய்வதற்குத் திட்டமிட்டுள்ளது.
மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைகள்
1. மூலஸ்தான திருத்த வேலை
2. அர்த்த மண்டப திருத்த வேலை
3. மகாமண்டப திருத்த வேலை
அத்துடன் முற்றுமுழுதாக சேதமடைந்த வசந்தமண்டப மணிக்கோபுர, பரிவார முருகன் ஆலய வேலைகள் என்பனவே உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளாக இனங்காணப்பட்டுள்ளன. இவ்வேலைகளை நிறைவேற்றுவதற்குப் பெருந்தொகையான நிதி தேவையாக உள்ளது. எனவே இப்பணியைக் குறித்த காலப்பகுதிக்குள் செய்து முடிப்பதற்குத் தங்களாலான பெருநிதியை வாரி வழங்கி பூர்வீக நாகதம்பிரானின் திருவருளைப் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் நிற்கின்றோம். நிதியினை கீழ்காணும் ஏதாவது ஓர் வங்கியில் வைப்பிலிடலாம். அல்லது பொருளாளரிடம் நேரில் கையளித்து அதற்கான பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ளலாம்.
வங்கிக் கணக்கு விபரம்
1)Nagarkovil Poorvika Nagathampiran Aalaya Paripalana Sabai,
Bank Of Ceylon,
Nelliady,
Srilanka.
Current Account No: 71373532
2)Nagarkovil Poorvika Nagathampiran Aalaya Paripalana Sabai,
Bank Of Ceylon,
Nelliady,
Srilanka.
Saving Account No: 71373459
3)Nagarkovil Poorvika Nagathampiran Aalaya Paripalana Sabai,
Commercial Bank,
Nelliady,
Srilanka.
Saving Account No: 8108039475
எமது சபையின் யாப்பு இங்கே தரவிறக்கம் செய்யப்படலாம்
நிர்வாகம்
13-1-2011