எதிர்வரும் 14.07.2011 வியாழக் கிழமை நாகர்கோவில் தெற்கு, மேற்கு பகுதிகளில் மக்களை மீளக்குடியமர்த்த உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன்
இதேவேளை நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான்ஆலய மகா கும்பாபிஷேகத்தினையும் மிகவிரைவில் ஆவணி மாதாத்தில் நடாத்தும் நோக்குடன் ஆலய பரிபாலன சபையினர் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.ஆலயபுனரமைப்பு மற்றும் கட்டுமானப்பணிகள் இந்தியாவில் இருந்து வருகைதந்துள்ள ஸ்தபதி கே.புருஷோத்தமன் தலைமையில் மிக துரிதமாக நடைபெறுகின்றன. ஐம்பது வீதமான வேலைகள் முடிவடைந்துள்ளன. தொடர்ந்து வேலைகள் நடைபெறுகின்றன. திட்டமிட்டபடி ஆலய கட்டுமானப் பணிகளைப் பூரணமாக நிறைவேற்றுவதற்கும், மகாகும்பாபிஷேகத்தை சிறப்பாகச் செய்து முடிப்பதற்கும் மேலும் ஒருதொகை நிதி தேவைப்படுகின்றது.
இந்நிதியினை வெளிநாடுகள், உள்ளுரில் வதியும் நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய பக்த அடியார்களிடமிருந்தும், நாகர்கோவில் மக்களிடமிருந்தும் ஆலயபரிபாலன
சபையினர் எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் அனைவரும் உங்களால் இயன்ற நிதியினை கீழ்க்காணும் வங்கிக் கணக்கில் ஏதாவது ஒன்றில் வைப்பிலிடலாம் அல்லது நேரடியாக பிரதி ஞாயிற்றுக் கிழமை நாட்களில் நாகதம்பிரான் ஆலய களஞ்சிய அறையில் ஒப்படைத்து அதற்கான பற்ற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆலயபரிபாலன சபையினர் அன்புடன் கோட்டுக்கொள்கிறார்கள்.
Nagarkovil Poorvika Nagathampiran Alaya Paripalana Sabai,
Bank of Ceylon, Nelliady, Sri Lanka.
Current Account No: 0071373532
Nagarkovil Poorvika Nagathampiran Alaya Paripalana Sabai,
Bank of Ceylon, Nelliady, Srilanka.
Saving Account No: 0071373459
Nagarkovil Poorvika Nagathampiran Alaya Paripalana Saba,
Commercial Bank, Nelliady, Sri Lanka.
Saving Account No: 8108039475
22.05.2011
நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயரிபாலன சபை